Tuesday, January 26, 2010

சித்தாலயம் அறிமுகம்

தமிழ் மொழியில் தோன்றிய சைவ சமயத்தின் இலக்கிய்கள், திருமுறைகள் என பன்னிரண்டு நூல்களாகவும், சித்தாந்த சாத்திரங்கள் என பதினான்கு நூல்களாகவம் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.
மக்கள் எப்படி வாழ வேண்டும், எவ்வித வாழ்க்கை முறைகளைக் கடைபிடித்தால் இறைவனோடு ஒன்றிப்போக இயலும் என்பதையும், மனித வாழ்க்கையின் உயர்விற்கும் ஒழுக்கத்திற்கும் தேவையான பல்வேறு மதிப்பிட முடியாத அரிய செய்திகளையும் தன்னகத்தே கொண்டது சைவ இலக்கியங்கள் ஆகும்.
சைவ சித்தாந்த சாத்திரங்களில் உள்ள பதினான்கு நூல்களில் முதன் மையாக உள்ளர் "திருவுந்தியார்" என்பதாகும். இதில் உள்ள பாடல்கள் அனைத்தும் "உந்தீபற" என முடியக் கூடியதாக அமைந்துள்ளது.
இறைவனைப் போற்றியும், மனிதகுலம் இறைவனடியில் சேர பலித அரிய வழிகாட்டுதலையும் கொண்டுள்ளதன் காரணமாகவே இந்நூலுக்கு "திருவுந்தியார்" என சிறப்பு பெயர் வழங்கலாயிற்று. இந்நூலின் ஆசிரியர் திரு. உய்யவந்த தேவநாயனார். கி.பி.12 ஆம் நூற்றாணடில் இருந்த சோழப் பேரரசர்களின் காலத்தைச் சார்ந்தவராவர். இவரது பாடல்கள் மற்றும் செயல்பாட்டுத் தன்மையின் காரணமாக கிடைத்த சிறப்பகளினால் இவரது இயற்பெயர் மறைந்து. நூலின் சிறப்பு பெயராகிய "திருவுந்தியார்" என்ற பெயராலேயே அக்காலத்திலும், பிற்காலத்திலும் அழைக்கப்பட்டு வருகிறார்.
அன்றாட வாழ்க்கையில் தோன்றும் எவ்வித உடல் நோயினையும், உள நோயினையும் தீரக்கவல்ல இறை வழிபாட்டு முறையினையும், இரகசிய நெறியினையும் கண்ட வல்லவராக இவர் திகழ்கிறார்.
இத்தகைய சிறப்புகள் கொண்ட சைசித்தாந்த ஞானி, சித்தர் "திருவுந்தியாரின்" நேரடி மரபு வழியினர்தான் சித்த மருத்துவர் A.A.தாயப்பன் மற்றும் சித்தாலயம் குடுப்பத்தினர் ஆவர்.
சோழர்குல மரபுபடி, இவர்களது குடும்பத்தில் வம்சாவளி பட்டியல் எழுதும் வழக்கம் உள்ளது.
டாக்டர். A.A.தாயப்பன் பழம் பெரும் சித்தர்களின் மருத்துவம், ஜோதிடம், வான சாத்திரம், தெய்வீக மாந்திரீகம் போன்ற பல அரிய ஓலைச்சுவடிகள், பிற நூல்கள் மற்றும் பலவித கலைகளைப் பயின்றவர்.
இவரது தந்தைவழி பாட்டனார் செய்யாற்றைவென்றான் தெய்வத்திரு. அப்பு முதலியார் அவர்கள் சித்த மருத்துவத்திலும், தெய்வீக மாந்திரீக கலையிலும் மிகவும் சிறப்பற்று இருந்தவர். அக்கால விவசாயத்தில் மிகுந்த முன்னோடியாக திகழ்ந்தவர். செய்யாறு வட்டம், வடநாங்கூர் - இராவ்பகதூர் V.A.அருணாசல முதலியாரின் குடும்பத்தைச் சேர்ந்த திருமதி. தாயம்மாள் அவர்களை வாழ்க்கை துணையாக கொண்டு வாழ்ந்தவர்.
இவரது தாய்வழி பாட்டனார் திருப்பாபுலியூர் (கடலூர்) தெய்வத்திரு. D.தண்டபாணி முதலியார் அவர்கள், கடலூர் - புதுப்பாளையம் பகுதியில் இருந்த சித்தர் - காசி மகான் ஸ்ரீதயானந்த சுவாமிகள் அருளால் பிறந்தவர். திருவண்ணாமலை ஸ்ரீஉண்ணாமுலை அம்மன் உடனாகிய திருஅண்ணாமலையார் திருக்கோயில் நிர்வாக அதிகாரியாக பல ஆண்டுகள் பணி புரிந்தவர்.
இவரது தந்தை காலஞ்சென்ற Dr.T.A.அய்யாதுரை முதலியார் சித்தமருத்துவத்தில் ஆழ்ந்த அறிவையும், பாரம்பரிய அனுபவத்தையும் பெற்றிருந்தததோடு, ஜெர்மன் நாட்டு ஹோமியோபதி மருத்துவத்திலும் பதிவு பெற்ற மருத்துவராக சிறந்து விளங்கினார். இவர் இரண்டாம் உலகப் போரில் "ராயல் இந்தியன் ஏர்போர்ஸ்" விமானப்படையில் பணிபுரிந்துள்ளார். அதற்குப்பின் திமிழக அரசுத்துறையில் நில அளவைத் துறையிலும், வருவாய்த்துறையிலும் மற்றும் கருவூலத்துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றார். பணிக்காலத்தில் சிறந்த தொழிற்சங்க முன்னோடியாக இருந்து, அரசு ஊழியர் சங்கத் தலைவராகவும் பணியாற்றிய பல சிறப்புகள் இவருக்கு உண்டு. இவரது தாய் Dr.C.A. மங்கை அவர்களும் மருத்துவத் துறையில் ஆழ்ந்த திறமையும், பதிவு பெற்றவராகவும் விளங்குகின்றார்.
திருவுந்தியார் காலம் முதல், சித்தாலயம் காலம் வரை பல்வேறு ஞானிகள், மடாதிபதிகள், சான்றோர்ப் பெருமக்கள் மற்றும் மருத்துவ முன்னோடிகள் போன்றவர்களின் நேரடித் தொடர்புகளாலும், வழி காட்டுதலாலும் பாரம்பரிய அனுபவ அறிவையும், வாழ்த்துக்களையும் இக்குடும்பம் பெற்றுள்ளது.
இதன் மூலம் 900 வருட தொன்றுதொட்ட பாரம்பரிய ஆனுபவ சிறப்பு கொண்ட சித்த முருத்துவ குடுப்பத்தைச் சேர்ந்தவராக "சித்தாலம்" டாக்டர் A.A.தாயப்பன் விளங்குகிறார். தற்போது பரம்பரை சித்த மருத்துவர் என்ற தொகுப்பின் கீழ் தமிழக அரசின் பதிவு சான்று பெற்ற மருத்துவராகச் செயல்பட்டு வருகின்றார்.

சித்தாலயம் இலச்சினை விளக்கம்



மனித குல நல்வாழ்க்கைக்காக உருவாக்கப்பட்ட "சித்தாலயம்". மனித குலத்தின் உயர்வை சித்தரிக்கும் வகையில் இதன் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.
இயற்கையின் படைப்பில் மிக உயர்ந்த படைப்பான மனிதனின் உடல், ஐந்து ஆதாரத் தத்துவங்களான நெருப்பு, காற்று, நீர், மண், ஆகாயம் முதலியவற்றால் படைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இலச்சினையில் உள்ள தீப்பிழம்பு - நெருப்பாகவும் (ஒளி), உடுக்கை - காற்றாகவும் (ஒலி), தாமரை - நீர் தத்துவத்திற்கும், பாம்பு - மண் ஆகவும், இதைச் சுற்றியுள்ள வெற்றிடம் - வெட்ட வெளியாகவும் (ஆகாயம்) குறிப்பிடும் வகையில் உள்ளது.
இந்த இலச்சினை மேலும் ஒரு உயர்ந்த தத்துவத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. உயர் படைப்பாய் தோன்றிய மனித குலத்தில் உள்ள ஆண், பெண் எனும் பிரிவுகளில், பெண்மையின் சிறப்பினையும், மேன்மையினையும் சித்தரிக்கும் வகையில் உள்ள தாய்மை தத்துவத்தை மையக் கருத்தாகவும் கொண்டுள்ளது.
மின் ஓட்டத்தில் நேர் நிலையும் எதிர் நிலையும் சேரும்பொழுது புதிய சக்தி பிறக்கின்றது. (விளக்கு எரிதல், மின் மோட்டார் இயக்குதல் மற்றும் பல) இரு காந்தங்களில் வடக்கு முனையும், தெற்கு முனையும் சேரும்பொழுது காந்த இழுப்புச் சக்தி உருவாகின்றது. வானத்தில் ஒளி, ஒலி உண்டாகும் போது (மின்னல், இடி) மழையும், பூமியை நோக்கி புதிய மிகுமின்சக்தியை வந்தடைகின்றது. அதே போன்று தான் தாயின் கருப்பையினுள் உள்ள பெண் கருவை நோக்கி (ஒளி) ஆண் கரு (ஒலி) உட்சென்று சேரும்போது புதிய உயிர் தோன்றுகிறது.
மேற்கண்ட தத்துவத்தை, இலச்சினையில் உள்ள இசைக்கருவியான உடுக்கையிலிருந்து வெளிப்பட்ட ஒலியானது (விந்து), தீப்பிழம்பில் உள்ள ஒளியுடன் (நாதம்) சேரும் போது ஒரு புதிய உயிர் தோன்றுவதாகவும், இவ்வாறு உருவாகிய புதிய உயிருக்கு தாயின் கருப்பையில், தாயின் உடலில் இருந்து தேவையான சத்துக்களையும், பிராண வாயுவையும் அளித்து அந்த உயிரை பூமியில் வெளியே பிரசவிக்கும் வரை பாதுகாத்துக் கொண்டிருக்கும் செயலை நஞ்சுக் கொடியானது செய்கின்றது. இது இந்த இலச்சினையில் புதிய உயிரைக் காக்கும் பொருளாக பாம்பு (மண் த்ததுவம்) குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய உயர், நஞ்சுக் கொடி இரண்டும் தாயின் கருப்பையில் பனிக்குட நீரினுள் அடங்கி இருப்பதைப் போன்று, இங்கு உயிர் காரணமாக உள்ள தீப்பழம்பு (ஒளி), உடுக்கை(ஒலி), காத்தலாய் உள்ள பாம்பு (நஞ்சுக்கொடி - மண்) அனைத்தும் நீர்த்துவமான (பனிக்குட நீர்) தாமரைக்குள் அடங்கி இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு "சித்தாலயம்" இலச்சினை மனித குலத்தையும், அதில் பெண் இனத்தின் மேன்மையையும் சிறப்பிக்கின்றது.